தீமதி நீக்குவோய் நல்மதி நல்குவோய்





அனுமன் நாற்பது

குருவே வணக்கம்

குருவின் திருவடிப் பொடிகளால் குணாளனாய்
வரமருள் இராமரின் வண்புகழ் பாடுவேன்

அனுமனே வணக்கம்

அறிவளி! அனுமனே! அறுத்திடு மோகமும்
நெறியளி! மனத்தில் நிறுத்தினேன் நின்னையே

நூல்

(அனுமன் நாற்பது)

ஞானக்கடலே நானிலம் போற்றும்
வானரர் தலைவநீ வாழ்க வாழ்கவே

ஆற்றலின் உறையுளே அண்ணலின் தூதனே
காற்றின் மைந்தனே காட்டுவாய் வெற்றியே

தீமதி நீக்குவோய் நல்மதி நல்குவோய்
நாமம் போற்றினேன் நல்லுர உடலோய்

பொன்னிற மேனியா புகழுடை பூண்டவா
மின்னிடும் குண்டலம் மிளிர்ந்திடும் செவியா

கொடியும் வச்சிரமும் உன் கைகளில் குலவிடும்
தடித்த உன் தோளில் பூணூல் தழைத்திடும்

உலகெலாம் வணங்கும் உயர்வலி வீரா
நலனருள் சிவனின் நல்லவ தாரம் நீ

அறிஞனே குணனே கூர்மதி கொண்டோய்
இராமரின் ஏவலுக் கேங்கியே நிற்போய்

இராமரின் கதையைச் சுவைக்கும்உன் இதயத்தில்
இராமர் இலக்குவர் சீதையும் நிறைந்துளர்

நுண்ணுருக் கொண்டு நீ சிதையைக் குளிர்வித்தாய்
நண்ணரும் கொடு உருவில் இலங்கையைக் கொளுத்தினாய்

பேருருக் கொண்டுபேய் அரக்கரை அழித்தாய்
ஆருயிர் இராமரின் அரும்பணி முடித்தாய்

சஞ்சீவி மலையினால் சகோதரன் பிழைத்திட
அஞ்சனை மைந்தஉனை அண்ணலே அணைத்தார்.

ரகுபதி பலவாய்ப் புகழ்ந்துனை வாழ்த்தினார்
வெகுபுகழ் பரதரின் நிகர்நீ என்றார்

நாயகன் அணத்தார் நன்றாய் வாழ்த்தினார்:
“ஆயிரம் நாவனும் அனுமனைப் பாடட்டும்”

சனக முனிவர்கள் சதுர்முகன் நாரதன்
மனமிக விரும்பும் மகேசன் கலைமகள்

நற்புகழ் நாவலர் கவிஞர் வானோர்
உன்புகழ் உரைக்க முயல்கிறார் இயலார்

சொல்லின் செல்வஉன் சொல்லொணா உதவியால்
நல்லரசு சுக்கிரீவன் நாட்டினான் நாயகனால்

உன்னுடை அறிவுரை உளங்கொண்ட வீடணன்
மன்னனாய் ஆனது மன்னுலகு அறிந்ததே

பல்லாயிரம் காதம் கடந்து நீ பகலவனை
நல்லதோர் கனியெனக் கண்டே விழுங்கினால்,

இராமரின் மோதிரம் திருவாயில் இருந்திட 
இருங்கடல் தாவியது இயலாத செயலோ!

கடினச் செயல்களும் கடிதில் நடந்திடும்
 அடிபணிந் திடும்உன் அடியார் வாழ்வில்

0 comments:

Post a Comment