Showing posts with label முருகன் பாடல்கள். Show all posts
Showing posts with label முருகன் பாடல்கள். Show all posts

அறவர்கள் தொழும்உருவே!




பகை கடிதல்


திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர்உருவே,
அருமறை புகழ்உருவே, அறவர்கள் தொழும்உருவே
இருள்தபும்ஒளிஉருவே, எனநினை எனதுஎதிரே,
குருகுகன்முதல்மயிலே,கொணர்திஉன்இறைவனையே

மறைபுகழ் இறைமுனரே, மறைமுதல்பகர்உருவே,
பொறைமலிஉலகுஉருவே, புனநடை தரும்உருவே
இறைஇளமுகஉருவே, எனநினைஎனதுஎதிரே
குறைவுஅறுதிருமயிலே, கொணர்திஉன்இறைவனையே

இதரர்கள்பலர்பொரவே, இவன்உறை எனதுஎதிரே
மதிரவி பலஎனதேர், வளர்சரன்இடைஎனமா,
சதுரொடு வருமயிலே, தடவரைஅசைவுஉறவே,
குதிதரும்ஒருமயிலே, கொணர்திஉன்இறைவனையே

பவநடை மனுடர்முனே, படர்உறும்எனதுஎதிரே
நவமணி நுதலணிஏர், நகைபல மிடறுஅணிமால்,
சிவணிய திருமயிலே, திடனொடு நொடிவலமே
குவலயம்வருமயிலே, கொணர்தி உன்இறைவனையே

அழகுஉறுமலர் முகனே, அமரர்கள்பணிகுகனே,
மழஉரு உடையவனே, மதிநனி பெரியவனே
இழவுஇலர்இறையவனே, எனைநினைஎனதுஎதிரே
குழகுஅதுமிளிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே

இணைஅறும்அறுமுகனே, இதசசிமருமகனே,
இணர்அணிபுரள்புயனே,எனநினை எனதுஎதிரே,
கணபணஅரவுஉரமே, கலை(வு)உறஎழுதரும்ஓர்
குணம்உறு மணிமயிலே, காணர்திஉன்இறைவனையே

எளியவ, என் இறைவ, குகாஎனநினைஎனதுஎதிரே
வெளிநிகழ்திரள்களைமீன், மிளிர்சினைஎனமிடைவான்,
பளபள எனமினுமா பலசிறைவிரிதருநீள்,
குளிர்மணி விழிமயிலே, கொணர்தி உன் இறைவனையே

இலகுஅயில்மயில்முருகா, எனநினைஎனதுஎதிரே,
பலபல களமணியே, பலபல பதமணியே
கலகல கலஎனமா, கவினொடுவருமயிலே,
குலவிடு சிகைமயிலே, கொணர்தி உன் இறைவனையே

இகல் அறுசிவகுமரா, எனநினை எனது எதிரே
சுகமுனிவரர் எழில்ஆர், சுரர் பலர்புகழ்செயவே,
தொகுதொகு தொகுஎனவே, சுரநடம் இடுமயிலே,
குகபதி அமர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே

கருணைபெய் கனமுகிலே, கடமுனிபணிமுதலே,
அருணையன்அரன்எனவே,அகம்நினைஎனதுஎதிரே
மருமலர் அணிபலவே,மருவிடு களமயிலே,
குருபல அவிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே

-பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்

ஓம் ஷண்மத பதேயே நமோ நம




குமாரஸ்தவம்


ஓம் ஷண்மத பதேயே நமோ நம 
ஓம் ஷட்க்ரீவ பதேயே நமோ நம 
ஓம் ஷட்கிரீட பதேயே நமோ நம 
ஓம் ஷட்கோண பதேயே நமோ நம 
ஓம் ஷட்கோச பதேயே நமோ நம 
ஓம் நவநிதி பதேயே நமோ நம 
ஓம் சுபநிதி பதேயே நமோ நம 
ஓம் நரபதி பதேயே நமோ நம 
ஓம் சுரபதி பதேயே நமோ நம 
ஓம் நடச்சிவ பதேயே நமோ நம 
ஓம் ஷடக்ஷர பதேயே நமோ நம 
ஓம் கவிராஜ பதேயே நமோ நம 
ஓம் தபராஜ பதேயே நமோ நம 
ஓம் இஉறபர பதேயே நமோ நம 
ஓம் புகழ்முநி பதேயே நமோ நம 
ஓம் ஜயஜய பதேயே நமோ நம 
ஓம் நயநய பதேயே நமோ நம 
ஓம் மஞ்சுள பதேயே நமோ நம 
ஓம் குஞ்சரி பதேயே நமோ நம 
ஓம் வல்லீ பதேயே நமோ நம 
ஓம் மல்ல பதேயே நமோ நம 
ஓம் அஸ்த்ர பதேயே நமோ நம 
ஓம் சஸ்த்ர பதேயே நமோ நம 
ஓம் ஷஷ்டி பதேயே நமோ நம 
ஓம் இஷ்டி பதேயே நமோ நம 
ஓம் அபேத பதேயே நமோ நம 
ஓம் சுபோத பதேயே நமோ நம 
ஓம் வியூஉற பதேயே நமோ நம 
ஓம் மயூர பதேயே நமோ நம 
ஓம் பூத பதேயே நமோ நம 
ஓம் வேத பதேயே நமோ நம 
ஓம் புராண பதேயே நமோ நம 
ஓம் பிராண பதேயே நமோ நம 
ஓம் பக்த பதேயே நமோ நம 
ஓம் முக்த பதேயே நமோ நம 
ஓம் அகார பதேயே நமோ நம 
ஓம் உகார பதேயே நமோ நம 
ஓம் மகார பதேயே நமோ நம 
ஓம் விகாச பதேயே நமோ நம 
ஓம் ஆதி பதேயே நமோ நம 
ஓம் பூதி பதேயே நமோ நம 
ஓம் அமார பதேயே நமோ நம 
ஓம் குமார பதேயே நமோ நம


 -பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாச சுவாமிகள்

தேவானை நாயகன்-வள்ளி பங்கன்



சண்முக கவசம்

அண்டமா யவனி யாகி யறியொணாப் பொருள தாகித் 
தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி
எண்டிசை போற்ற நின்ற வென்னரு ளீச னான
திண்டிறற் சரவ ணத்தான்றினமுமென் சிரசைக் காக்க

ஆதியாங் கயிலைச் செல்வ னணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் றானிரு நுதலைக் காக்க
சோதியாந் தணிகை யீசன் றுரிசிலா விழியைக் காக்க
நாதனாங் கார்த்தி கேய னாசியை நயந்து காக்க.

இருசெவி களையுஞ் செவ்வே ளியல்புடன் காக்க வாயை
முருகவேள் காக்க நாப்பன் முழுதுநற் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க.

ஈசனாம் வாகு லேய னெனதுகந் தரத்தைக் காக்க
தேசுறு îதாள்வி லாவுந் திருமகள் மருகன் காக்க
ஆசிலா மார்பை யீரா றாயுதன் காக்க வென்றன்
ஏசிலா முழுங்கை தன்னை யெழிற்குறிஞ் சிக்கோன் காக்க.

உறுதியாய் முன்கை தன்னை யுமையிள மதலை காக்க 
தறுகணே றிடவே யென்கைத் தலத்தைமா முருகன் காக்க
புறங்கையை யயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும் 
பிறங்குமான் மருகன் காக்க பின்முது கைச் சேய் காக்க.

ஊணிறை வயிற்றை மஞ்ஞை யூர்தியோன் காக்க வம்புத்
தோணிமிர் சுரேச னுந்திச் சுழியினைக் காக்க குய்ய
நாணினை யங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ
ஆணியைக் கந்தன் காக்க வறுமுகன் குதத்தைக் காக்க

எஞ்சிடா திடுப்பை வேலுக் கிறைவனார் காக்க காக்க
அஞ்சக னமொரி ரண்டு மரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருட்காங் கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சர ணேச வாசான் றிமிருமுன் றொடையைக் காக்க.

ஏரகத் தேவ னென்றா ளிருமுழங் காலுங் காக்க
சீருடைக் கணைக்கா றன்னைச் சீரலை வாய்த்தே காக்க
நேருடைப் பரடி ரண்டு நிகழ் பரங் கிரியன் காக்க
சீரிய குதிக்கா றன்னைத் திருச்சோலை மலையன் காக்க.

ஐயுறு மலையன் பாதத் தமர் விரலுங் காக்க
பையுறு பழநி நாத பரனகங் காலைக் காக்க
மெய்யுடன் முழுது மாதி விமலசண் முகவன் காக்க
தெய்வநா யகவி சாகன் றினமுமென் னெஞ்சைக் காக்க.

ஒலியெழ வுரத்த சத்தத் தொடுவரு பூதப் ரேதம்
பலிகொளி ராக்க தப்பேய் பலகணத் தெவையா னாலுங்
கிலிகொள வெனைவேல் காக்க கெடுபரர் செய்யுஞ் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடா தயில்வேல் காக்க.

ஓங்கிய சீற்ற மேகொண் டுவனிவில் வேல்சூ லங்கள்
தாங்கிய தண்ட மெஃகந் தடிபர சீட்டி யாதி
பாங்குடை யாயு தங்கள் பகைவரென் மேலே யோச்சின்
தீங்குசெய் யாம லென்னைத் திருக்கைவேல் காக்க காக்க.

ஒளவிய முளரூ னுண்போ ரசடர்பே யரக்கர் புல்லர்
தெவ்வர்க கௌவரா னுèலுந் திடமுட னெனைமற் கட்டத்
தவ்வியே வருவாராயிற் சராசர மெலாம்பு ரக்குங் 
கவ்வுடைச் சூர சண்டன கையயில் காக்க காக்க.

கடுவிடப் பாந்தள் சிங்கங் கரடிநாய் புலிமா யானை
கொடியகோ ணாய்கு ரங்கு கோலாமார்ச் சாலஞ் சம்பு
நடையுடை யெதனா லேனு நானிடர்ப் பட்டி டாமற்
சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க.

ஙகரமே போற்ற ழீஇ ஞானவேல் காக்க வன்புள்
சிகரிதே ணண்டுக் காலி செய்யனே றாலப் பல்லி
நகமுடை யோந்தி பூரா னளிவண்டு புலியின் பூச்சி
உகமிசை யிவையா வெற்கோ ரூறிலா தைவேல் காக்க.

சலத்திலுய் வன்மீ னேறு தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலுஞ் சலத்தி லுந்தா னெடுந்துயர் தரற்கே யுள்ள
குலத்தினா னான்வ ருத்தங் கொண்டிடா தவ்வவ் வேளை
பலத்துட னிருந்து காக்க பாவனி கூர்வேல் காக்க.

ஞமலியம் பரியன் கைவே னவக்கிர சுக்கோள் காக்க
சுமவிழி நோய் கடந்த சூலையாக் கிராண ரோகம்
திமிர்கழல் வாதஞ் சோகை சிரமடி கர்ண ரோகம்
எமையணு காம லேபன் னிருபுயன் சயவேல் காக்க.

டமருகத் தடிபோ னைக்குத் தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மங் குடல்வலி யீழை காசம்
நிமிரொணா திருத்தும் வெட்டை நீர்ப்பிர மேக மெல்லாம்
எமையடை யாம லேகுன் றெறிந்தவன் கைவேல் காக்க.

இணக்கமில் லாத பித்த வெரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்குங் குஷ்ட மூலவெண் முளைதீ மந்தஞ்
சணத்திலே கொல்லுஞ் சன்னி சாலமென் றறையு மிந்தப்
பிணிக்குல மெனையா ளாமற் பெருஞ்சத்தி வடிவேல் காக்க.

தவனமா ரோகம் வாதஞ் சயித்திய மரோச கம்மெய்
சுவறவே செய்யு மூலச் சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோயண்டவா தங்கள் சூலை
எவையுமென் னிடத்தெய் தாம லெம்பிரான் றிணிவேல் காக்க.

நமைப்புறு கிரந்தி வீக்க நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை யாகுபஃ றொழுநோய் கக்கல்
இமைக்குமுன் னுறுவ லிப்போ டெழுபுடைப் பகந்த ராதி
இமைப்பொழு தேனு மென்னை யெய்தாம லருள்வேல் காக்க.

பல்லது கடித்து மீசை படபடென் றேது டிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சக் காட்டியே யுருட்டி நோக்கி
எல்லினங் கரிய மேனி யெமபடர் வரினு மென்னை
ஒல்லையிற் றார காரி ஓம்ஐம் ரீம்வேல் காக்க.

மண்ணிலு மரத்தின் மீது மலையிலு நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதுஞ் சாரிசெய்யூர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தி னுள்ளும் வேறெந்த விடத்து மென்னை
நண்ணிவந் தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க.

யகரமே போற்சூ லேந்து நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலா மீரா றம்பகன் வேல்பின் காக்க
சகரமோ டாறு மானோன் தன்கைவே னடுவிற் காக்க
சிகரமின் றேவ மோலி திகழைவேல் கீழ்மேல் காக்க

ரஞ்சித மொழிதே வானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல்கி ழக்கிற் றிடமுடன் காக்க வங்கி
விஞ்சிடு தினையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்îதா னிகலுடைக் கரவேல் காக்க.

லகரமே போற்கா ளிங்க னல்லுட னௌ¨ய நின்று
தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்
றிகழெனை நிருதி திக்கி னிலைபெறக் காக்க மேற்கில் 
இகலயில் காக்க வாயு வினிற்குகன் கதிர்வேல் காக்க.

வடதிடை தன்னி லீசன் மகனருட் டிருவேல் காக்க
விடையுடை யீசன் றிக்கில் வேதபோ தகன்வேல் காக்க
நடக்கையி லிருக்கு ஞான்று நவில்கையி னிமிர்கை யிற்கீழ்க்
கிடக்கையிற் றூங்கு ஞான்று கிரிதுளைத் துளவேல் காக்க.

இழந்துபோ காத வாழ்வை யீயுமுத் தையனார் கைவேல்
வழங்குநல் லூணுண் போது மால்விளை யாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்துநெஞ் சடக்கம் போதுஞ்
செழுங்குணத் îதாடே காக்க திடமுடன் மயிலுங் காக்க.

இளமையில் வாலி பத்தி லேறிடு வயோதி கத்தில்
வளரறு முகச்சி வன்றான் வந்தெனைக் காக்க காக்க
ஒளியெழு காலை முன்னே லோஞ்சிவ சாமி காக்க
தௌ¨நடு பிற்ப கற்கால் சிவகுருநாதன் காக்க.

இறகுடைக் கோழித் தாகைக் கிறைமுனி ராவிற் காக்க
திறலுடைச் சூர்ப்ப கைத்தே திகழ்பினி ராவிற் காக்க
நறவிசேர் தாட்சி லம்ப னடுநிசி தன்னிற் காக்க
மறைதொழு குழக னெங்கோன் மாறாது காக்க காக்க.

இனமெனத் தொண்ட ரோடு மினக்கிடுஞ் செட்டி காக்க
தனிமையிற் கூட்டந் தன்னிற் சரவண பவனார் காக்க
நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க வித்தைக்
கனிவொடு சொன்ன தாசன் கடவுடான் காக்க வந்தே


-பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்

ம‌ன‌ம்பித்தானாலும் முருக‌ன் அருளால் முத்தாவேன்



ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்
ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்

க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன்
க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன்
ப‌சும் புல்லானாலும் முருக‌ன் அருளால் பூ ஆவேன்
நான்...ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்

பொன்னானாலும் வ‌டிவேல் செய்யும் பொன்னாவேன்
ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கை பூவ‌வேன்
பொன்னானாலும் வ‌டிவேல் செய்யும் பொன்னாவேன்
ப‌னி பூவானாலும் ச‌ர‌வ‌ண‌ப்பொய்கை பூவ‌வேன்

த‌மிழ் பேச்சானாலும் திருப்புக‌ழ்விள‌க்க‌ பேச்சாவேன்
த‌மிழ் பேச்சானாலும் திருப்புக‌ழ்விள‌க்க‌ பேச்சாவேன்
ம‌ன‌ம்பித்தானாலும் முருக‌ன் அருளால் முத்தாவேன்
நான்...ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்

சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
ப‌ழ‌ச்சுவையான‌லும் ப‌ஞ்சாமிர்த‌ச் சுவையாவேன்
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
ப‌ழ‌ச்சுவையான‌லும் ப‌ஞ்சாமிர்த‌ச் சுவையாவேன்

அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன்
அருள் உண்டானாலும் வீடும் பேரும் உண்டாவேன்
த‌னி உயிரானாலும் முருக‌ன் அருளால் ப‌யிராவேன்
நான்... ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்
க‌ருங்க‌ல்லானாலும் தணிகை ம‌லையில் க‌ல்லாவேன்
ப‌சும் புல்லானாலும் முருக‌ன் அருளால் பூ ஆவேன்
நான்...ம‌ண்ணானாலும் திருச்செந்தூரில் ம‌ண்ணாவேன்
ஒரு ம‌ர‌மானாலும் ப‌ழ‌முதிர் சோலை ம‌ர‌மாவேன்

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்



ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய
கந்தர் சஷ்டி கவசம்

குறள் வெண்பா

அமரர் இடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி


நேரிசை வெண்பா

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!